SARAH...

யார் இவள்???

என்னடா இவள் எதோ பிதற்றிக் கொண்டே இருக்கிறாளே! இவள் யார்?? எனும் கேள்வி உங்கள் மனதில் எழலாம். பெருமையாய் சொல்லிக் கொள்ள தக்க சிறப்பாய் ஏதும் செய்யாத, ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசைக் கொண்ட ஓர் சாதாரண பெண். 

சாரா.. நண்பர்களிட்ட பெயர்.. என் பேனாவிற்கு சூட்டிவிட்டேன்! 

சாரதா தேவி சங்கரன்.. தாத்தா வைத்த பெயர்.. அவரின் மறு பாதியானவள் மேல் கொண்ட காதலின் விளைவு.., எனக்கொரு அழகான பெயர்...

எட்டாம் வகுப்பு தமிழ் டீச்சர் (சரஸ்வதி மிஸ்) அழகாய் வாசிக்கும் செய்யுள் வரிகளில் மயங்கியும், ஆங்கிலம் என்னென்று அறியாப் பிள்ளையான எனக்கு பக்கத்தில் அமர்ந்து கற்றுக்கொடுத்த ஆங்கில டீச்சர் (மீனாக்ஷி மிஸ்)'ன் டெடிகேஷனும் தான் என்னை முதன்-முதலில் பேனா பற்ற தைரியம் கொடுத்த தருணங்கள். 

எந்த மேடை ஆனாலும் பேசிவிடும் தைரியம் பேச்சு போட்டிக்கு பயிற்சி செய்யும் போது ஆறாம் வகுப்பில் சீனியர் அக்கா ஒருத்தியைப் பார்த்து கற்றுக்கொண்டது. 
இன்றும் நினைவிருக்கிறது பசு மரத்தாணியாய், அவள் கற்றுக்கொடுத்த வரிகள்- 

"அன்புசால் நடுவர் அவர்களுக்கும் அன்பார்ந்த சான்றோர்களுக்கும் மற்றும் இங்கு வீற்றிருக்கும் அனைவருக்கும் முதற்க்கண் என் கனிவான வணக்கத்தை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்".

தமிழில் இவ்வளவு அழகுள்ளது என்பது என் மூளையை அறைந்தது அன்றே! அதனை ஆழமாய் பதித்த பெருமை என் ஆசிரியையைச் சேரும்.. 

என்றாவது ஒரு நாள் உங்களில் ஒருவரை oxford அல்லது cambridge'இல் பார்க்க ஆசைப் படுகிறேன் என கூறிய என் ஆங்கில டீச்சரின் வார்த்தைகள் இன்றும் ஊக்கமாய் ஒலிக்க கனவில் வாழ்கிறேன் நினைவாக்கிக் கொள்லலாம் என்று.. என்னை ஆசிரியை ஆக தூண்டிய பல ஆசிரியர்களில் என் அன்னைக்கு அடுத்தது இவ்விருவர் பெயர் சேர்த்து விட்டேன்! 

இப்படி ஆர்வக் கோளாறில் ஆரம்பித்த ஒரு முயற்ச்சி தான் இந்த "பொற்கிழி"- என் எண்ணங்களை கட்டிக் கொடுக்க ஓர் வழி..!

English literature படித்தவள் தமிழிலும் எழுதுகிறாள் .. எழுத்துப் பிழைகளை திருத்த உதவுங்கள்..
நான் காணும் அன்றாட மக்களில் என்னை பாதிப்போர், பாதிக்கும் நிகழ்வுகள், கிட்டத்தட்ட autobiographicaலாக கொஞ்சம் கற்பனைக் கலந்து ஒவ்வொரு காசாய் இடுகிறேன் இப்பொற்கிழியில் என் வசதிக்கேற்ப.. வாசித்து விட்டு எப்படியேல்லாம் விமர்சனத் தீயிலிட வேண்டுமோ அப்படி எல்லாம் போட்டு வாட்டுங்கள் உருகி தூய்மையும் புத்துயிரும் பெறட்டும்! 

blogspotடுக்கும், என் கணினி தோழிக்கும் நன்றிகளுடன் 
எழுதிக்கொண்டிருக்கும் 
அன்பு தோழி 
சாரா! 


OMG Who is She!! 

I named this section as "Oh My God! Who is She?" stealing from my recent addiction of Taylor Swift's "Blank Space". 

So who is She? The one whose words you are passing by....! 

Let me introduce myself.. Sarah- as my Friends call me.. Is my Pen-name.

I was named Sharadha Devi Sankaran after my Grand-Mother. Sharadha Devi, When so many students in Zambia asked me what my name meant, I answered it means Goddess of Knowledge, thats the pride and euphoria that my Name gives me. 

I don't know if I justify the words I am named after. But Knowledge is something that attracts me the most. I fall for intellectual conversations like a small kid falling in love for Candy! 
In a way I still have that small kid in me who is fond of Candies :) 

Love, Unconditional and Beyond Lust, thats one thing that makes me want to Write. It has the immense ability to get me drunk in Emotions that words flow out of my Hands and I Freeze live in those breath-taking moments again and again through Words.

I love writing in English and Tamil. Some emotions can be conveyed only in Tamil some in English a very Few in Both. However I love writing in Duo-Lingua. I hope I Justify the expectations of Language in doing So... 

Apart from Love, I write on Books, inner feelings of my heart, Darkness, Silence and anything that touches the verge of my excitement to Write. 

A passionate person, for whom trivial happiness matter more than greater pursuits. A girl beyond stereo-types. A person who writes on anything that touches the heart in the course of her day to day Happenings of Working out, Office, Treks, Travels, New People etc...

A person who loves Attention and Appreciation, who loves being the Centre of Attraction. 
If there is one place that I would love to be anytime it will the Stage. It gives a mixture of feelings from excitement to butterflies in the stomach. 

An original make- I describe myself as.. For which I am thankful to get this Life. 
The Falooda Cup-  A palate of Emotions, A mixture of meaningful moments, A cup of mixed tastes in mixed temperatures... The Falooda Cup is a package of Drunken Emotions... 

Dear Readers, 

Sometimes its better to Relish certain things in life than told... The Falooda Cup with Sarah is one such Relish.. Hope you enjoy it in its original Flavors,
LIVE LOVE CELEBRATE THIS EVENT CALLED LIFE :) 

Love,
Sarah 

1 comment: