Wednesday, March 9, 2016

"அது ஒரு வேற லெவல் யுபோரியா"

ஏனோ இந்த உணர்வை
உன்னிடம் பகிர தோன்றவில்லை
என் கணினி தோழியே!
கோபம் வேண்டாம்...
சில கணங்களின் கனம்
மொழியை விட மனம் சுமந்தால்
பசுமை மாறா நிலையெட்டும் :)

அவன் படிக்க வேண்டும் என்ற ஆசையோடும்
கண்டுகொள்வானோ என்ற வெட்கத்தோடும்
உணர்ச்சிக்குழம்பினில் மிதக்கும்
வெண்டை பிஞ்சாய்
ருசியேற்றப்பட்ட ரசிகையாய்!

"அது ஒரு வேற லெவல் யுபோரியா"
என அடிக்கடி கூறி சிமிட்டும் அடர்ந்த
இமை முடி ஒன்றை மயிலிறகு போல்
புத்தகத்தில் பூட்டிவைக்க ஆசைப் படுகிறேன்
குட்டிகள் இட்டால் ஒட்டிக் கொள்ளலாம் என்று!

முதல் சந்திப்பில்
முக்கால் வரலாறு கூறியவன்
புதிராய் பேசுகிறான்,
உணர்ச்சி அலைகள் வீசுகிறான்!
ரகசியங்கள் அறிந்தவள்? எனக் கேட்டு
வார்த்தைகள் தோன்றா
மௌனங்கள் தருகிறான்!

கண் முன் தோன்றுவதே மெய் எனும்
உய்யளவும் கள்ளமில்லா பேச்சுகள்!
இவளோடு பயணிக்க வேண்டும் எனும் ஆசையும்
அவளையும் அவ்வழியே தூண்டும் திண்மையும்!
இடங்கள் பல கூறி என்னோடு வருவாயோ
எனக் கேட்காமல் கேட்ட கண்ணியம்!
ரகசியங்கள் அறிந்தவள்
ரசனைகள் ரசிப்பவள்
காலத்தால் கட்டப் பெற்றவள்!
என அறிந்தும் ஆட்கொள்கிறான்!

கண்ணாடி இடம் சென்று நின்றேன்
பிம்பத் தோழி மொழிகிறாள்-
"ஆராய்ச்சிகள் ஏதுமின்றி
யோசனைகளின் மோதலின்றி
ரகசியங்கள் தேடா
ரசனைகள் கொண்டவன்!
கதைக்கும் கணங்களின் அழகு போதும்
ஆழம் பார்க்க தேவையில்லை" என்று...

தலையாட்டி விரிக்கும்
அவன் அடர்ந்த இமைக் கண்டு
கணங்கள் பல துலைத்து நின்று
சிலிர்ப்பினில் திளைக்கும்  :)
உன் அன்பு தோழி
சாரா 

1 comment:

  1. இராம் பிரசாத்March 18, 2016 at 7:03 PM

    அருமை..சிறப்பு.
    என் பாராட்டுக்கள் வாரத்தைத் தொகுப்பில்..

    "வரிகள் அருமை.
    வாரத்தகைள் செழுமை.
    ஔவையின் புலமை.
    ஆண்டாளின் இளமை.!!!"
    அன்புத் தமயனி்ன் பாராட்டுக்கள்...

    .வாரணம் ஆயிரம் சூழ..............மதுசூதன் வந்தனெ்னை கைத்தளம் பற்ற கனா கண்டேனடி தோழி...இதை நினைவூட்டியது உன் வரிகள்.

    இராம்பிரசாத்

    ReplyDelete