Showing posts with label #latepost. Show all posts
Showing posts with label #latepost. Show all posts

Thursday, March 10, 2016

என் டைரி பெட்டகத்திலிருந்து... சென்னை வளர்ந்து விட்டாள் !

சிறு பிள்ளையாய் சொல்ல நினைத்த பல உணர்வுகளை மைத் தீட்டி எழுதி வைத்த என் டைரி பெட்டகத்திலிருந்து சில குழந்தைத்தனம் நிறைந்த வளராக் குறிப்புகள்....
அவ்வளவு சிறப்பா இருக்காது அனால் சிரிப்பு வரும்! 
ன்னடா இவள் இவ்வளவு மொக்க போடறாளே என தோன்ற வைக்கும் அளவுக்கு இங்க இருக்கற பல பதிவெடுகளுக்கெல்லாம் இந்த பதிவேடு அக்காள்! 

ஜாக்கிரதை! பக்கத்தில் சிறிதளவு நீர் வைத்துக்கொண்டு படியுங்கள் கோபம் வந்தால் தணிக்க உதவும்! 

1. சென்னை வளர்ந்து விட்டாள் !

மழை நாளன்று என்னடா நச நச'ன்னு  மழை கொட்டுது என பலர் பீல் பண்ண ஒரு நாள்! என் மனதில் உதித்த எண்ணங்களை மை வண்ணம் தீட்டிவிட்டேன்...


நிலங்கள் வறண்டன .. காரணம்
கதிரவனின் சூழ்ச்சியா? இல்லை 
அறிவியலின் அபார எழுச்சியா?

மழை நீர் பொழிந்தது.. காரணம்!
துயர் படும் ஏழையின் கண்ணில் 
நீர் துளியின் பெருக்கமா?
இல்லை கண்ணில் தோன்றா 
இறைவனின் கருணையா?

மேகங்கள் கூடின- இதைப் போல் 
மக்களும் கூடுவர் என்று 
ஆனால் அவனோ காத்திருந்து பெற்ற 
மழையையே பழிக்கிறான்!  (2008)


மாறுவது காலம் 
அக்காலமானது கற்பிக்கும் 
என்ற பொன்மொழிகள் எல்லாம் 
பொய்க்காத வண்ணம் 
இன்று மழையில் கூடிய கைகள்!
நான் பார்த்து வளர்ந்த சென்னை சான்சே இல்ல இல்ல!
என்பதற்கு இது ஓர் அழகிய உதாரணம் :) (2015)

16 வயதிற்கு,  
அடிக்கடி ட்ராவல் செய்யும்
அன்பு தோழி 
சாரா