Showing posts with label #tamil. Show all posts
Showing posts with label #tamil. Show all posts

Monday, July 25, 2016

முதல் பயணம்

அவனும் நானும் இரவில் ஒரு குறும்பயணம் 
ஒவ்வொரு நொடியும் எங்கள் பெரும்பயணக் கனவில் 
அவன் தோழ் சாய ஆசை! ஆனால்...
எனோ களைப்பு இன்று நட்பு கரம் நீட்டவில்லை 

அருகாமையின் ஆனந்தமா?
முதன் முதலாய் எனும் ஆரவாரமா?
மனம் மிதந்தபடியே ஏதேதோ பிதற்றி 
வழிந்து... அதைக் கண்டு அவன் சிரிக்க 
மீண்டும் விழுந்தேன்!

கார் மேகம் கொழுத்து வெடித்தார் போல் 
கால்வாய்  வெடித்து வரப்பு நுழையும் பாய்ச்சலாய் 
தடுப்புகள் எல்லாம் உடைந்து போக 
அய்யங்கள் எல்லாம் கரைந்து போக 
வெட்க மழை கொட்ட ...
அவன் அன்பில்.. எங்கள் காதலில்!

காதல் கிறுக்கும் 
அன்புத் தோழி,
சாரா..

Saturday, June 18, 2016

நாணிக்காமல் ஏற்கிறேன் முதன் முதலாய்...

என் அன்னையோடு ஓர் கோவில் பயணம். 
பற்பல ஜோசிய பெருமக்களை பார்ப்பதும், அவர்கள் கூறும் தோஷங்களை எண்ணிப் பதறுவதும், 'எத்தை திண்ணால் பித்தம் தெளியும்' என பரிகாரங்கள் பல செய்வதும், நான் பசியோடு இருந்தால் பாசமாய் அவள் செய்து தரும் கத்திரிக்காய் சாதம் போல் அவள் என்மேல் கொண்ட அளவற்ற அன்பின் வெளிபாடு. என் மகள் எக்குறையும் இன்றி சந்தோஷமாய் இருக்க வேண்டும் எனும் நப்பாசையின் விளைவு. 
அப்படி ஓர் பரிகார பயணமாய் இராமேஸ்வரத்திற்கு சென்றோம். 

ஒரு தீட்சிதர் வீட்டில் தங்கினோம். அங்கே என்னைப் போல் ஒரு சிறு பெண் இருந்தாள். மறு நாள் அதிகாலை விரதம், தோஷ நிவர்த்தி பரிகார பூஜை, கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடல், இறுதியில் கடலில் நீராடி பழைய துணிகள் விலக்கி புத்தாடை அணிந்துகொண்டால் பழைய ஆடைகளோடு தோஷங்களும் விலகிச் செல்வதாய் அய்தீகம். இந்த வழக்கம் எனக்கு பழகி போன ஒன்று என்றே கூறலாம். இராமேஸ்வரத்தில் ஏனோ எனக்கு அந்த அலை மோதாக் கடல் ஓர் பேரானந்தம். ஆங்கிலத்தில் கூறவேண்டுமென்றால் "Subtle Tides”. கடல் என்றாலே அலாதி இன்பம் கொள்ளும் எனக்கு, இராமேஸ்வரக் கடல் ஒரு படி மேல்! 

தீட்சிதர் வீட்டு வாசலிலிருந்து பார்த்தால் கடல் கண் முன் மின்னிக் கொண்டு நாட்டியமாடும். தீட்சிதர் வீடு, அந்தகாலத்து அழகில், நீளமான மரக்கதவுகள், தூண்கள், பழைய ஸ்டைல் சுவிட்சுகள் என எளிமையும் கலை அழகும் நிறைந்திருந்தது. 

நல்லதோர் பௌர்ணமி மாலை. எனை மறந்து நிலவு பார்த்த படியே கடல் நோக்கி நின்றேன். 
என்னதான் என் அன்னையின் இறை ஈடுபாட்டை பல முறை ஏளனம் செய்தாலும், சிறு வயதிலிருந்து பாட்டி சொல்லித் தந்த பக்தி பாடல்களும், தாத்தா கூறிய இராமாயண, மகாபாரதக் கதைகளும், பள்ளியில் சொல்லிக் கொடுத்த சுலோகங்களும் பஜனைகளும் பசுமரத்தாணியாய் என்னுள் பதிந்திருந்தது என்று உணர்ந்து அதை மறைக்க, மறக்க முயன்று தோற்றுப் போன பல தருணங்கள் உண்டு. 

எங்கோ ஒலிக்கும் கோவில் பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் சேர்ந்து பாடுவதும், பக்திப் படங்கள் பார்த்தல் என்னை மறந்து மெய் சிலிர்த்துப் போவதும், ஆனந்த நீர்த் துளிகள் சிந்துவதும், நான் மட்டும் அறிந்த இரகசிய பக்தி அனுபவங்கள். 

அப்படி என்னுள் என்னை மீறி ஊறிப் போய் இருக்கும் இறை பக்தியைக் கண்டு நெகிழ்ந்தும் பயந்தும், அதற்காகவே சில காதல்களை புறக்கணித்தும் இருக்கிறேன். சில நாட்கள் ஏதும் நினையாமல் அமைதியாய் ஓர் ஆற்றங்கரை, ஆசிரம வாசம், என செல்லவதற்கு தூண்டும் அளவிற்கு உரமிட்டு வளர்த்திருக்கிறேன் இந்த பக்தியை. 

அப்படி ஒரு பக்தியில் கடல் கண்டு நான் நிற்க, கண்டு கொண்டேன் என் அழகிய வேலனை. திருசெந்தூர் முருகன்... என் இஷ்ட தெய்வம்!

அவர் இராஜ அலங்காரத்தில் நிற்க மறந்து போனேன் சில கனங்கள். முருகனவன் சிரித்த படியே நின்றான். கிரீடம், பட்டாடை, தங்கத்தாலான ஆபரணங்கள் என இராஜ தோற்றம் கொண்டு அவன் நிற்க பிரமிப்பும் ஆச்சரியமும் சூழ சிலிர்த்துப் போனேன். 

திடீரென்று செந்தூரப்பன் ஆவர் அப்பன் தோற்றம் கொண்டார்! நீண்ட சிகையும், தீர்க்க புருவங்களும், ஞானத்தின் உருவாய் ஒளிரிடும் கண்களும், நீலக் கழுத்தும், நிகரற்ற ஆண்மை தாங்கிய தேகமும் என்னை மெய் சிலிர்க்கச் செய்தது சிவ பெருமானின் விஸ்வரூபத் தோற்றம். என்னை அறியாமல் கைகள் கோர்த்து ஈசா என நின்றேன். கண்ணில் ஆனந்த நீர் பெருகியது.

ஈசனடி போற்றி!
எந்தையடி போற்றி!
நேசனடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!
நெகிழ்ந்து நின்றேன் என் தேவனவன் முன்னே! 

ஈசன் மறைய நாரணன் தோன்றினான். வெண்ணிறத் தேகம் தங்க ஒளி பெற்று ஜொலித்து அழகின் உருவாய் நின்றான். வீழ்ந்து விட்டேன் அவன் அழகில்! ஆனந்தக் கடலில் மூழ்கலானேன்!
மைத் தீட்டிய கண்கள், அழகிய சுருள் கேசம், வண்ண வண்ண நூலில் கோர்த்த மனிகாளால் ஆன அதிகமாய் இல்லாமல் அங்கங்கே அவன் அழகுக்கு அழகு சேர்க்க மெல்லிய ஆபரணங்கள்,  வெண்ப்பட்டு பீதாம்பரத்தில் பேரழகனாய் நின்றான். அவன் கண்ணின் ஒளி கண்டு அவன் தாண்டி காண அழகில்லை எனத் தோன்றியது…

அப்படியே அவன் அந்த சலனமற்ற கடலில் இறங்க, சில கனங்கள் கண்ணனவன் எனை நோக்கி வருவதை உணர்ந்தவளாய் உறைந்துப் போனேன்…

அவன் நடந்து வந்து, தீட்சிதர் வீட்டு உள்ளறைக்குள் நுழைந்தான். அவன் போன திசையில் விசையீர்தார் போல் என் கண்களும் போனது. கைகள் நிமிர்த்தி தங்கக் குழளினை எடுத்து இசைத்தபடியே நின்றான் என் கண்ணன். உலகம் உலவும் சொர்க்கமாய் மாறியது. கண்ணா எனக் கண்கள் விரித்து வியப்பில் நின்றேன்... எனை மீறிய மௌனம் என்னை வதைத்தது. வலிக்கு மறுந்திட்டார் போல் அவன் இசை என் மனதை நெகிழச் செய்தது. கைகள் நீட்டி அழைத்தான். அவன் மேல் கொண்ட காதலில் கேள்விகள் இன்றி கால்கள் அவன் பக்கம் சென்றது. 

என் கை பற்றி ஆடலானான்...
அடைந்தேன் மோட்ஷத்தை!

எனை மறந்து பக்தியில் நெகிழ்ந்து சில கனங்கள் ஆடலில் திளைத்தேன். கால்கள் தரையில் இல்லை. அவன் கையில் சுழலும் திருச்சக்கரம் போல் நானும் மிதந்த படியே சுழலலானேன். ஒரு சூஃபி துறவியைப் போல் இயற்கையில் இணைந்த ஓர் ஆடல். மெய் சிலிர்க்கச் செய்தான்... இப்படி தான் மீராவிற்கு நிகழ்ந்ததோ! கோபியர்கள் இதனால் தான் கண்ணன் மேல் காதலாய் இருந்தனரோ! என்னே ஓர் ஆனந்தம்... ஆன்மீகம் மேகமாய் ஆக மிதந்தேன் நான் மழைப் போல்!

உடலணிந்த ஆடைப் போல் 
எனை அணிந்து கொள்வாயா இனி நீ? கண்ணா 
தூங்காத என் கண்ணின் 
துயிலுரித்த கண்ணன் தான் இனி நீ…

விஸ்வரூபம் படத்தின் பாடல் வேதமாய் ஒலிக்க, அவன் ஒளியில் உலகு மறந்து கிடந்தேன்!
திடீரென்று என் இறை நிலையை தடுத்து நிறுத்த ஓர் கைப் பற்றியது. கண்ணனவன் இன்னும் என் பக்கம் நின்று கொண்டிருக்கிறான். ஆனால் அவளோ என்னை 'என்ன கனவா' எனக் கேள்வி கேட்கிறாள். அந்த சின்னப் பெண்...தீட்சிதர் வீட்டு பெண்... அவள் என் கைப் பற்றி மறுபடியும் ஒரு முறைக் கேட்டாள் 'அக்கா, என்ன கனவா?' என்று. என் கண்ணனைப் பார்த்த படியே நான் உறைந்து நின்றேன். 

தீட்சிதர் வந்தார். நான் அவரிடம் நேரமற்று துடிக்கும் இதயம் போல் 'நான் கண்ணனைக் கண்டேன்.. முதலில் முருகன்... பின் ஈசன்.. பின் கண்ணன்.. என் நாரணன் நம்பி வந்தான்! நாங்கள் இராச லீலையில் ஆழ்ந்தோம்!' என்றேன் ஆனந்தமாய். அந்த சிறு பெண் சொன்னாள்- எல்லாம் உன் மனதின் மருட்சி! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பயணக் களைப்பில் கனவு காண்கிறாய். தீட்சிதரும் நம்பவில்லை. இறுதியில் நானும் கனவென்று நினைத்து உள்ளே சென்றேன். கண்ணனவன் காணாமல் போனான்.. 
அன்னையிடம் கூறினேன் கனவொன்று கண்டேன் என்று... அந்த சிறு பெண் வேராரும் அல்ல, நீ தான், என்றாள். திகைத்துப் போனேன்!

உன்னுள் இருக்கும் இறுக்கம்! பக்தி வேண்டாம் என எண்ணத் தூண்டும் கேள்விகள் நிறைந்த குழப்பங்களின் கூடாரம். நான் கடவுள் எல்லாம் வனங்குபவள் அல்ல என பெருமைப் பேசிக் கொள்ளும் ஆடம்பரம். அவள் தான் அந்தப் பெண். உன் பக்திக்கு "hallucination" எனப் பெயரிட்ட உன் மனதின் மறுப் பக்கம். 

"பின் அந்த தீட்சிதர்…”? அவர் வேராரும் அல்ல உன்னைச் சுற்றி உள்ள, நீ காணும் உலகம், உன் சமுதாயத்தின் எண்ணங்களாய், நீ நினைப்பது எல்லாம் அவர் உருவில் நின்று இருக்கிறது. அவர்கள் கூறுவது தான் மெய் என நம்பினாய், கனவென்று கண்ணனை மறந்தாய்" எனறாள். தலையில் அடித்தார் போல் இருந்தது ஒரு கணம். 

ஆம்... எல்லாம் என் மனதின் பிரதிபலிப்புகள் என உணர்ந்தேன். 
அன்னை தொடர்ந்தாள்... பக்தி, காதல், அறிவியல், ஆன்மிகம், இலக்கியம் எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடித்தளம். நம் வாழ்வின் இலக்கணம் கூறும் பல mediumகள். எது பற்றி சென்றாலும் இறுதியில் நம் மனதில் குழப்பங்களும் சலனங்களும் இல்லாமல் இருந்தால் மட்டுமே இன்பம் கிட்டும். இது சரி... இது தவறு... என்று எல்லாம் ஒன்றையே தான் மொழிகிறது! மொழிகள் தான் வேறு! இதில் இது பெரிது! இது சிறிது! என கூச்சமோ ஏளனமோ ஏதுமில்லை... 

உன் மனம் கூறும் வழி பற்றி இன்பம் காண தைரியம் வேண்டும், என்றாள்...
எனக்கென்று ஒரு வழி அமைத்து அதைப் பற்றி செல்ல ஆய்த்தமானேன்... நான் நம்புவதை தைரியாமாய் ஏற்கும் வழி. என் முடிவுகளுக்கு பொறுபேற்கும் மறைக் கற்றேன். 
மறுநாள் பரிகாரம், என் நம்பிக்கை வட்டத்தில் இல்லை என்றாலும், இராமேஸ்வரம் ஆலய தரிசனம் என் மனம் நிறைக்கச் செய்தது என நாணிக்காமல் ஏற்கிறேன் முதன் முதலாய்... 

மீண்டும் கண்ணன் வந்தால் 
என்ன கீதோபதேசம் கிட்டும் 
எனும் எதிர்பார்ப்பில் 
எழுதிக் கொண்டிருக்கும் 
அன்பு தோழி 
சாரா 

Tuesday, May 31, 2016

கிலோமீட்டர் கனவுகள்...

அதிகாலை ஓட்டம் நேரம்..
என் கால்களை விட வேகமாய் ஓடுது மனம்
ஓடிக்கொண்டே ஓர் கனவு வாழ்வு! 

முதல் கிலோமீட்டர்... 
என் பிள்ளைகள் இருவருடன் இதே போல் ஒர் காலை... 
என் காளையைப் பற்றி பேசியபடியே! 
அப்பாவுக்கு சமத்து குழந்தைகள் பிடிக்கும்..
Always strike a balance between body & mind.. 
Be disciplined.. எனக் கூறிய படியே!
எனக்கே சொல்லிக் கொள்கிறேன்...
I will teach my children to learn and do everything as a relaxation and not as a taxing work..
They should know that there is no such thing called pressure than just a thought! 

தாயிலிருந்து மனைவியாய் 

இரண்டாம் கிலோமீட்டர்..
சலனமுற்று அவன் நின்றால் புரிந்து கொள்ள வேண்டும்!
அக்கரையோடு அவன் சொல்வான்-ஏற்றுக் கொள்ள வேண்டும்!
கோபமெனும் தீயை பொசுக்கி  விட வேண்டும்! 
அவன் எப்படியானாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்! 
எனக்கென அவள் என அவன் எண்ண வாழ வேண்டும்! 
அன்பு அக்கரை காதல் எல்லாம் அளவாய் ஆழமாய் வேண்டும்! 

பிள்ளையார் சுழி கூட எழுதாத கதைக்கு
க்லைமாக்ஸ் வரை கனவு கண்டு 
மிதந்துக் கொண்டே ஓடும்...

மூன்றாம் கிலோமீட்டர்...
மூளையிலிருந்து உதித்தது!
நிறைய படிக்கனும்...
டாக்டர் பட்டம்! 
பெரிய பேராசிரியை!
அடுத்த சில ஆண்டுகள் ஆராய்ச்சி!
புத்தக வெளியீடு.. 
இவை எல்லாம் நடக்கும் போது..
அவனின் துணை!
ஓர் கை பிடிப்பு.. கன்னத்தில் முத்தம்!
எல்லாவற்றிற்கும் மேலான பேறு அதுவே! 
அவன் கண்ணில் என் பெருமை!

Ambitions நோக்கி பயணித்த படியே

நான்காம் கிலோமீட்டர்!
பயத்தில் ஓர் நடைப் பயணம்!
If destiny is different from dream!
If fate is not what I fancy!
If he never falls in love?
If rolling where the stream leads the only choice! 
If I fall? If the fall is hard? 
Fear shadows my thoughts..
Engulfs my positivity..
I yearn for a push to pull up!
As I realize it is within and not elsewhere!
My leg pedals in the air..

நாளை எனும் கனவில் மூழ்கி மூச்சடங்கும் முன் இன்றில் குதிக்க.. 

ஐந்தாம் கிலோமீட்டர்...
என் பிள்ளைகளுக்கு பொறுமை சொல்லிக் கொடுக்கும் முன்.. 
அவையெல்லாம் நினையாப் பொறுமை நான் கற்க வேண்டும்!
எண்ணங்களில் காணல் கானல்!
நாளை வெறும் நம்பிக்கை!
இன்று நிஜமெனும் மெய்!
என் பேதை மனதை கடிவாலமிட்டு அடக்கிய படியே!
ஓடி முடித்தேன் மீண்டும் ஓர் ஓட்டம் தொடங்க...


ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் 
விடியலானால் ஓடாமல் இருக்க முடியாமல் 
துடிக்கும் fitness freak ஆகிய,
runner's highயில் பயணிக்கும் 
அன்பு தோழி 
சாரா 

Thursday, May 19, 2016

காதல் மேல் காதல் எனக்கு!

காதல்... காமமும் அன்பும் கலக்கும் சங்கமம்
காமம் உடலும் அன்பு உயிருமாய் மோகிக்கும் நிலைக்- காதல்!
உடல் என்பது தசையல்ல- தசைத் தாண்டிய ஓர் விசை
தசை மாண்டும் விசை மாறா ஓர் பிழைக் காதல்!

பிழை! 
ஏனோ பிழைகளெல்லாம் மறைந்துப் போவதால்...
அதுவே மறை!
மறந்து மன்னித்து வாழ்வது- காதல்!

மன்னிபதிலும் சுகம் மன்னிப்பு கேட்பதிலும் சுகம்..
ஏன் கேட்க வேண்டும் எனும் திமிர் தருவதும் காதல்!
திமிரெல்லாம் துலைத்து அவன் முன் வெட்கத்தில் குழைவது
வெட்கமெனும் ஆபரணம் சூட்டிவிடும் சுட்டித்தனம் காதல்!

இன்று, பிடிக்கும் என அவன் கூற ஏங்குவதும் 
மழை நாளில் மனம் பறப்பதும் காதல்!
தீண்டும் அவன் கண்களும், சீண்டும் அவன் கைகளும் 
அவன் மனக் காட்டில் எனைத் தொலைப்பது காதல்!

மணிக் கட்டு பார்த்து சந்தித்தாலும் 
மனம் நிறைக்கச் செய்யும் இனிப்பு, காதல்!
தொலைபேசி இடையூறுகள் பொறுப்பதும் 
தொலைவில் அவன் போனால் வெறுப்பதும் காதல்!

மனதைக் கண்ணாடியாய்க் காட்டும் தைரியம்
எண்ணங்கள் எதுவானாலும் ஏற்க்கும் மோகம்- காதல்!
நடு இரவில் குறுஞ்செய்தி படித்து
எனை மறந்து தூக்கத்தில் புன்னகை- காதல்!

எனை போல் அவனில்லை என அறிவது- அறிந்தும் 
செல்லச் சண்டைகளுக்கு ஆசைக் கொள்வது காதல்!
சண்டைகள் இறுதியில் கோபமா எனக் கேட்பதும் 
எனக்கென்ன கோபம் எனும் அழகியப் பொய்-காதல்!

நான் எப்படியானாலும் அவன் ரசிப்பான்- அறிந்தும்
அவனுக்காகவே அலங்கரித்துக் கொள்வது காதல்!
வேலை முடிக்கும் வேளைக்குக் காத்திருந்து, 
வியர்வைக் காணா அணைப்புகள்- காதல்!

பிடிக்காத வீட்டு வேலைகளும்- அவனை அக்கரையோடு 
பார்த்துக் கொள்வதில் பிடித்துப் போவது- காதல்!
பிடித்துப் போகும் 1000 ஆண்கள் வந்தாலும்
அவனுக்கென கண்ணியம் காப்பது காதல்!

சாலையில் கைக் கோர்க்கவில்லை என்றாலும் 
அவன் கண்கள் எனை நீங்காமல் இருப்பது- காதல்!
ஊரெல்லாம் அறிய காட்டிக் கொள்ளாமல்
எங்கள் அரை ரகசியங்கள் காப்பது- காதல்!

அவன் வட்டத்தில் நானும் என் வட்டத்தில் அவனும் 
இணையும் வென்ன் டையக்ராம்- காதல்!
இப்படி எல்லாம் எண்ணங்கள் தந்து மகிழ்விப்பதனாலோ
ஏனோ, காதலே எனக்கு உன் மேல் கொள்ளைக் காதல்!

காதல் கிறுக்கில்
கிறுக்கிக் கொண்டிருக்கும் 
அன்பு தோழி,
சாரா

Sunday, May 15, 2016

My Love(r) Dream! -என் காதல் கனவு(வன்)!

My Love(r) Dream!

When eyes keep looking out for a blink in the phone,
When ears keep yearning for hearing his tone,
When no tune could express what I feel for him, 
When every day begins and ends with a message from him, 
When it feels that there is someone to care,
And is full of so much of life to share
When it felt like mornings are rain with his hug!
And his attention became a Drug!
When I started seeing a tomorrow the way he want, 
For it takes trust, love and care to hold onto the knot,

Begins a journey to the land of maturity..
Where protection doesnt ask for possession,
Where Care is just an Eye and not a Hold!
Where trivial gestures of love make the day..
And trivial expectations dont block the way!
Where days begin with love filled today 
And end hoping a lively tomorrow!

Where mistakes in the Dawn 
Do not spoil the happiness of Dusk!
Where I can be me- Yet 
Be the she he likes!
Where he is just he-Yet 
I see my man in he!
Falling had a meaning 
And he is my family becoming!

To live one day a time
And dream the days to come
Rising when Fallen
Caring is Loving
With Love 
Sarah!

என் காதல் கனவு(வன்)!

இருளில் செல் போன் வெளிச்சத்திற்கு காத்திருந்து
எப்பொழுதும் அவன் குரல் கேட்க ஆசைக் கொள்ளும் மனது!
அவனுக்கென பாடல்கள் கேட்கத் தேடி,
குருஞ்செய்திகளில் தொடங்கி முடியும் நாட்கள் பல கோடி!

எனக்கென ஒருவன் உரங்காமல் இருக்க 
மனமெல்லாம் பேச நாட்களற்று கிடக்க 
அவனின் அணைப்பில் கனமெல்லாம் நிறைய 
பேசும் மொழியெல்லாம் மனதோடு உரைய
அவன் கண்ணில் நாளைக் கண்டு 
எந்தன் கண்ணின் கனவென ஆகுதே!

கள்ள முத்தங்களில் காழ்பெல்லாம் மறைய!
செல்லக் கொஞ்சல்களில் கெஞ்சலெல்லாம் அடங்க!
தப்பெல்லாம் டப்பென மறக்க!

அவனின் அவளாக ஆனாலும் என்றும் நானாக!
என்னின் அவனாக ஆனாலும் என்றும் என்னவனாக!
எண்ணங்கள் ஏதுமின்றி தொடங்கும் பயணம் 
என்றும் திண்மை மாறாமலிருக்க ஆசைக்கொள்ளும் மனம்!

வென்னூலிட்டவன் என்னுள் புகுந்தான் 
என்னூலும் கூறா உணர்வுகள் தந்தான்!
வேதங்கள் சொல்லா எண்ணங்கள் அவனிடம்
அதனால் தானோ தொலைகிறது என் மனம்!

விழுவதிலும் தொலைவதிலும் 
நாட்கள் நகர்த்தும் 
பேதைக் காதலி
அன்பு தோழி!
சாரா

Wednesday, May 4, 2016

அவன்!

அவன் பார்க்கிறான் என்று 
வித விதமாய் அலங்கரித்தே..
வெட்க மைத்தீட்டி புதிதாய் 
பூனை நடைப் பழகுகிறேன்!

அவன் கேட்கிறான் என்று
பலப் பல மொழிகளெல்லாம்
ஆராய்ந்து, புதுப் பாடகியாய்
காதலிசை காதிலிசைத்துப் பார்க்கிறேன்! 

அவன் பேசுவான் என்று
என்றும் இல்லாததாய் இன்று
அவனுக்காகவே அடித்துப் பிடித்து 
பவர்பென்க் சார்ஜர் தேடுகிறேன்!

அவனுடன் வாழ ஆசைக்
கொண்டு, வட்டமிட்டு நிற்க்கிறேன்
உரிமைக்கயிற்றிட்டு அழைத்துச் செல்வான்
தனிமைச் சிறைத் தகர்ப்பானென்று!

அவனில் தொடங்கி என்னில்
முடிய- காதாலானது! இறுதியில்
அவனே ஆதி அவனே 
அந்தம் என ஆழமானது! 

அவனில் என்னைக் காணும், 
பெண்மைக் கொண்ட காதல்
கிறுக்கி, அன்பு தோழி,
சாரா

Wednesday, April 13, 2016

இருமையில் ஒருமைத் தேடி.... The Enigma of Extremes!

Life is an Enigma.. 
A never-ending bunch of puzzles! 
It calls for Exploration, Introspection, Realizationa and Actualization. 
In this process we lose ourselves into the Wild!
We go in search of meaning!
We fear meaninglessness, failure, and discontent!
That leads to even more deeper thinking.. 
So here is what Sarah's Thoughts lead to...

THE ENIGMA OF EXTREMES

Like the M between the two E's of extreMes!
The M of me stands in the middle!
In between the two poles of living. 
The extremes of ambition and content calls.
For ambition lays at north high and flashy!
Content lays in South Peaceful and Serene!
When Sophistications mean North drags me
Its Stipulations repels me to the start!
When Serenity mean South pulls me!
Its Speculations pushes me to where I Stood!
Yet the attraction is endless!

Like the M between the two E's of extreMes!
The M of me stands in the middle!
In between the two poles of living. 
When Settling seems a blessing
Ambitions stand a question!
When ambitions mean the World 
So called Settling creates a Traffic Jam!
For the fear of Pain haunts me down!
The fear of Failure throbs me forever!

Where is the meaning?
Where is never Brooding?
Between the numerous roads that lead to The End
Which one do I Choose? 
For I want to take the road that takes me to...
The end that is most desired 
The end which never put you down 
Never gives you up before the Fury of Self-Introspection 

When there is no fixed Map
Walking is the only way
For the Oasis of life can be found 
Only when Searched For!
If falling is a part of the trail
Let me fall! But let the Fall not be Hard!
For Living an Enigma 
And I an Explorer 
Would wander searching a Way!
But never just Stay!


Love,
SARAH

இருமையில் ஒருமைத் தேடி.... 

இரு துருவங்களுக்கு இடையில் 
                 ஓர் உலகம் கொண்டு வாழ்கிறோம்!
சில நொடிகள் மேலே செல்லவும்  
                 சில நொடிகள் கீழே செல்லவும் ஆசைப் படுகிறோம்!
இரு புறமும் உள்ள விரைக்கும் பணியையும் 
                 மிருகங்களையும் கண்டு அஞ்சுகிறோம்!
எனினும் மாசற்ற அழகின் ஈற்ப்பை       
                 என்றும் நாடுகிறோம்! 
இது வேண்டும் ஆனால் 
                 வலி வேண்டா என ஓடுகிறோம்! 
வலி இருந்தாலும் உணர வேண்டாமென 
                  வழிகள் பலத் தேடுகிறோம்!
மனம் மட்டும் ஓடி.. மயில்கள் பலத் தாண்டி 
                  கனவு உலகம் சேருகிறோம்!
அய்யங்களுக்கும் ஆக்கத்திற்கும் இடையே 
                  வாழ்வெனும் ஆட்டம் ஆடுகிறோம்!
இரு வழியில் எது வழி என 
                 விழி விரித்து முழிக்கிறோம்!
எது காணல்? எது குளம்?
                  என குதித்து பார்த்து அறிகிறோம்! 

கேள்விகளின் பெட்டகமாய்,
ஆசைகளின் கூடாரமாய், 
இருமையில் ஒருமைத் தேடும்,
வெறுமைக் கண்டு அஞ்சும்,
அன்பு தோழி,
சாரா

Friday, April 8, 2016

என் டைரி பெட்டகத்திலிருந்து... 3. புலம்பல் குவியல் படிக்க வேண்டாம்!

3. புலம்பல் குவியல் படிக்க வேண்டாம்!
அ. கண்ணில் குறுதியின் பெருக்கம் 
      மனதில் சோகத்தின் தாக்கம் 
      வார்த்தைகள் உதடு மட்டும் ஓசையின்றி 
      என்ன இந்நிலையோ இப்பெண்ணுக்கு 
      துணைவன் பிரிவினால்!
      என்ன பரீட்சையோ வாழ்வில் 
      தனிமை நிலையினால்!
      எவருக்கும் இவ்வித நிலை வேண்டா..
      என்றும் ஓர் அடிமையாய்! 

ஆ. சுனாமியைப் போல் ஒரு 
      ஒரு அலை என்னைத் தாக்கினாலும் 
      மனதின் தாக்கம் குறையாது 
      வானளவு சோகம் பெருகினாலும்
      சோர்வின் தாக்கம் பெருகாது 
      மண்ணளவு எனும் நிம்மதி கிட்டும் என்றே 
      என் பொறுமையின் அளவு குறையாது 
      என்று வரை இந்நிலையோ நீ என்னை 
     ஆட்கொள்ள மாட்டாயோ வீடே 
     விடு பெறவே வீடு பெற நினைக்கிறேன்!

இ. கண்ணில் நீரில்லை 
      ஆனால் சோகத்தின் தாக்கம் 
      இதயம் துடிக்கிறது கதறலை நாடி 
      அங்ஙனம் தான் அறிந்தேன் 
      மனதின் அழுகை நீரில் இல்லை   
      ஏனோ !
      வற்றியது நீர்..
      மருகியது மனம்..
      பெருகியது துயர் 
      கருகியது திடம் 

கொடுமையாய் சோகக் கவிதை எழுதும் 
தோழி 
சாரா

Wednesday, March 9, 2016

"அது ஒரு வேற லெவல் யுபோரியா"

ஏனோ இந்த உணர்வை
உன்னிடம் பகிர தோன்றவில்லை
என் கணினி தோழியே!
கோபம் வேண்டாம்...
சில கணங்களின் கனம்
மொழியை விட மனம் சுமந்தால்
பசுமை மாறா நிலையெட்டும் :)

அவன் படிக்க வேண்டும் என்ற ஆசையோடும்
கண்டுகொள்வானோ என்ற வெட்கத்தோடும்
உணர்ச்சிக்குழம்பினில் மிதக்கும்
வெண்டை பிஞ்சாய்
ருசியேற்றப்பட்ட ரசிகையாய்!

"அது ஒரு வேற லெவல் யுபோரியா"
என அடிக்கடி கூறி சிமிட்டும் அடர்ந்த
இமை முடி ஒன்றை மயிலிறகு போல்
புத்தகத்தில் பூட்டிவைக்க ஆசைப் படுகிறேன்
குட்டிகள் இட்டால் ஒட்டிக் கொள்ளலாம் என்று!

முதல் சந்திப்பில்
முக்கால் வரலாறு கூறியவன்
புதிராய் பேசுகிறான்,
உணர்ச்சி அலைகள் வீசுகிறான்!
ரகசியங்கள் அறிந்தவள்? எனக் கேட்டு
வார்த்தைகள் தோன்றா
மௌனங்கள் தருகிறான்!

கண் முன் தோன்றுவதே மெய் எனும்
உய்யளவும் கள்ளமில்லா பேச்சுகள்!
இவளோடு பயணிக்க வேண்டும் எனும் ஆசையும்
அவளையும் அவ்வழியே தூண்டும் திண்மையும்!
இடங்கள் பல கூறி என்னோடு வருவாயோ
எனக் கேட்காமல் கேட்ட கண்ணியம்!
ரகசியங்கள் அறிந்தவள்
ரசனைகள் ரசிப்பவள்
காலத்தால் கட்டப் பெற்றவள்!
என அறிந்தும் ஆட்கொள்கிறான்!

கண்ணாடி இடம் சென்று நின்றேன்
பிம்பத் தோழி மொழிகிறாள்-
"ஆராய்ச்சிகள் ஏதுமின்றி
யோசனைகளின் மோதலின்றி
ரகசியங்கள் தேடா
ரசனைகள் கொண்டவன்!
கதைக்கும் கணங்களின் அழகு போதும்
ஆழம் பார்க்க தேவையில்லை" என்று...

தலையாட்டி விரிக்கும்
அவன் அடர்ந்த இமைக் கண்டு
கணங்கள் பல துலைத்து நின்று
சிலிர்ப்பினில் திளைக்கும்  :)
உன் அன்பு தோழி
சாரா 

Thursday, March 3, 2016

பறிக்கப்பட்ட-பறிகொடுத்த பசுமை "Snatched-Lost Innocence"

மரத்து போன உணர்ச்சிகள் தேடி
மறந்து போன காலங்கள் தீண்டுகிறேன்
பறந்து சென்ற நொடிகள் கண்டு
சரிந்து போன நிலை எட்டுகிறேன்
சிலிர்த்த சில நொடிகள் பறித்த உண்மையை
துரத்தும் மனமின்றி துறக்க முயலுகிறேன்
மஞ்சள் முகம் காரென ஆனதேனோ?
கொஞ்சல் மொழி கானலாய் போனதேனோ?

காரணங்கள் தேடவில்லை

சூசனங்கள் விளங்கவில்லை
மாறன் அவன் முன்னே மாயைகள் புரியவில்லை
கணிதங்கள் அறியவில்லை
காசெனும் காகிதம் கையில் நிற்கவில்லை
பனிக்குழம்பினைக் கண்ட கண்மணி போல்
காதல் கண்டு மயங்கிவிட்டேன்
காவுக்கு நிற்கும் ஆடென எண்ணினான்
ஆடவம் தீர ஆடையை களையலானான் ..
காளை என கனவு கண்ட மனம்
களை என தூக்கி எரிந்தது..
மூளை இன்று மனதினை வென்றது
சீழ் பெற்றார் போல் வடுவென ஆனது!

பல்லாங்குழி ஆடும் பருவம்
பாலை என ஆனதேனோ?
கண்முன் மகள் அவள்
எதிர்பார்க்கும் அரவணைப்பை
அன்னையவள் காணவில்லை
தந்தையவன் கேளவில்லை
அண்ணனவன் உணரவில்லை
திருடன் ஒருவன் கண்டான்
பறித்துச் சென்றான்
அவர்களின் மகளை அல்ல
அவளின் பசுமையை
பிள்ளை போல் சிரிக்கும்
பொன்னான புன்னகையை!


பிள்ளைப் பருவத்திலேயே வெகுளித்தனம் 
பறிக்கப்பட்ட பதுமைகளுக்கு 
சமர்ப்பணம்!

அன்பு தோழி 
சாரா (Sarah)
A Numbness lurks within
Touching the Buried moments
Witnessing the Flown Days
An Ecstasy sets with-in
A lost Truth in the Mist of Frenzies
Uninterested to Chase I Chose to Give-up
Blush face turned Hustly Grey!
Chirrupy Talks turned to Silent Walks!

Reasons- Never a Search

Cautions- Nor a Thought
For eyes deceived in Magical Illusions
Calculations were at Bay!
Money seemed just a Paper.
Like a Baby at the sight of an Ice-cream
I ran to him at the sight of Love.
Scape goat was I for his Eyes!
A pitcher to Quench his Thirst!
The heart that spake of Cupids
Now speak of Lucifer!
Mind Winning over the Heart
Spinning in the Pain of Scars.

A walk along a barren desert was it

When Sweet Sixteens turned Morbid
For when Eyes of Care
Fail to Give a fair share
Hands of Protection
Vanish into thin air!
Friend of a Childhood time
Lose the Page of my Life,
Flew it into the Hands of a Thief
Snatched did he,
Not the little girl
But her Flawless innocence
And her Magical Smile!
For those Angels ,
Fallen prey to the fury of Infatuation,
Love, 
Sarah 

Sunday, February 21, 2016

அய்யய்யோ திருடு போனது!

மொழிய வார்த்தைகள் கிட்டாத 
ஓர் அற்புத உணர்வு!
மொழிந்தால் மீண்டும் கிட்டும் 
என ஆசையாய் ஓர் முயற்சி. 

அய்யய்யோ திருடு போனது!
கள்வன் ஒருவன் கத்தி ஏதும் இன்றி 
கதைப்புகளாலே கவர்ந்துச் சென்றான்.
என் இதயக் கல்லாப் பெட்டியை.
மோகம் ஏதும் இன்றி 
கண்ணங்கள் சிவக்கச் செய்தான். 
ஏக்கத்திலும் ஏற்றம் கிட்டும் என 
என் தேகத்தைக் காக்கச் செய்தான்!

ரசிக்கும் அவன் கண்கள் 
புசிக்கும் வேகத்தை 
முத்தங்களாலே முறியடிக்கிறது!
துடிக்கும் என் இதயம் 
வெடிக்கும் நிலை எட்டி 
யுத்த்ங்களாய் தவிக்கிறது!

சிரிக்க வைக்கும் சிறுவனும் 
சிலிர்க்கச் செய்யும் சித்தனும் 
சேற்றில் நீர் போல் ஓர் கலவையவன். 

நூற்றில் ஒருவனாய் மோகமின்றி 
காதல் செய்யும், காதலின்றி 
நட்பு காட்டும், உள் நோக்கமின்றி 
உரையாடும் ஓர் அற்புத ஆடவன். 

சிறு சிறு நொடியாய் வாழும் 
செதுக்கிய நினைவுகள் தந்து 
அணு அணுவாய் செல்லும் 
கை அணைத்த ஓர் பயணம் தருகிறான்.

பேச்சுத்துணை வெறும் பேச்சாய்ப் போன இக்காலத்தில் 
மொழியாலே மாயம் செய்யும் 
வீச்சு வாழ் வீரனவன் 
தூண்டும் காமுகியை வெல்லும்போது!

முடிவில், காதல் வெல்லுமோ?
மோகம் வெல்லுமோ?
காலம் வெல்லுமோ?
காதலும் மோகமும் வெல்லும் 
காலம் கிட்டுமோ? 
வலிதான் கிட்டுமோ?
ஓர் வழித்துணைக் கிட்டுமோ? 
கண்ணீரை கரைக்கும் 
வலிமைக் கிட்டுமோ?

எண்ணற்ற கேள்விகள் கடல் அலையாய் 
மோதிச் செல்ல, அவனோடு பயணிக்கும் 
கணங்கள் போதும் என மனம் சொல்ல 
காலன் அவன் முன் கேள்வியாய் நிற்கிறேன்!

கன்னம் தழுவி கள்ள முத்தம் தந்து 
கவலைகள் மறக்கச் செய்கிறான் 
துறு துறு பார்வைகளாலும் 
கூரானக் கருத்துகளாலும்!

கைகள் கோர்க்கணும் 
கன்னம் சிவக்கணும் 
கூந்தல் கோதணும் 
மோகம் தீரனும் 
காதில் கொஞ்சனும் 
தழுவி நிற்கணும் 
காலம் மறக்கணும் 
என்றும் காதல் இருக்கணும்!
பேதையாய் ஆசை கொள்ளும் 
திருடு போன என் இதயக் கல்லா பெட்டி :) 




அழகியக் கள்ளனை 
கண்களில் சுமந்துக் 
கண்கள் மூடாமல் 
கனவில் பயணிக்கும் 
புதுமைக் காதலி 
அன்பு தோழி 
சாரா
(Sarah)



Translation for Non-Tamils :( First Try.. Bare with ME :) 

Oops its Stolen!

With no words to express my Feelings
I Try to Live the moment Again Via Expression


Oops its Stolen!
On a Weaponless Encounter A Theif Stole,
The Treasury of My heart
With no lust nor sensuousness 
He made me Flush a Pink 
He makes me wait With Hopes & Longing
That there is Elation in Desperation!

The admiration in his Eyes
The hunger rushing inside
He kisses them a Goodbye!
My Rushing Heart
Is high to Burst 
Lost in the War of Elations!

A happiness doctor young and strong
An espirited Sage-like Self-Control
He was as a combination as Clay! 

One in Hundreds with No Lust
Loving, Lovelessly Friendly, 
An amazing man, 
Conversing with no hidden intentions!

He gave me sculptured moments of Living 
A slow journey holding hands!
A Modern time Quality talk is a Myth 
A man who spends time on Words!
Valiant is He! Winning, 
The Tempting Tempest around me! 

In the end Shall Love Win?
Or Lust?
Shall Time Win?
Or both?
Will I end in Pain?
Will I have a Companion? 
Will I gain the Power
To engulf the Pain?

As Numerous Questions as the Waves
Touch and Wet the Corner of my Eyes!
Content is the present that is with him
Says the heart as I stand a Question before
The Lord of Time! 

He held my cheeks and Blew a Kiss
Fading Worries like a breeze
Deep is his looks &
Deeper are his Thoughts!

Wanna Hold Hands 
Wanna Flushy Blush
Wanna caress my hair
Wanna Live the Lust
Wanna Love Crazy 
Wanna Hug around 
Forgetting Tick & the Tock! 
To Love forever and More!
Madness is the Heart 
That was Stolen by Him!


Bearing  my handsome thief in my Open Eyes 
On a Love Journey  
Unique Love and Loving Friend, 
Sarah

Saturday, January 30, 2016

உணர்வுகளுடன் ஓர் உரையாடல்...

சினமும் அழகென்று இன்று கண்டேன் சகியே!

தோழன் ஒருவனுடன் சாலைப்  பயணம்.
இசையில் நனைந்த காதுகள்... 
சட்டென உயிர் பெற்ற நீர்நீங்கிய மீனைப் போல் 
சீரிய 'ஏய்' எனும் ஓசையில் விழித்தது ...
நிகழ்ந்தது என்னென்று உணராமல்..
என்னைத் தான் அழைத்தானோ?
ஏன் அப்படி ஒரு சீற்றம் அவன் குரலில்?
முன்னோக்கி பார்வை இட்டேன்.  
எருதினில் நிற்கும் எமணன நின்றதடி 
இரு சக்கர வாகனம் ஒன்று.
சீற்றத்தின் காரணம் அறிந்தும் தடுக்கும் மனமில்லை. 
பயமா? நியாயமடீ  என்ற மனக்குரலின் ஆளுமையா?
உணர்சிகள் உறைய சில கணங்கள். 
தன்னை விழுங்கும் சினத்தை விழுங்கிக்கொண்டு 
பொறுமை மறவாத பொறுப்புடன் 
தவறினை உணரா ஆணவம் கண்டு 
கொம்புகள் சீவிய காளை  போன்று, 
விருட்டென சென்றான்..வீரனாய் நின்றான். 
தட்டி கேட்கும் ஆண்மைக் கண்டேன் 
பெண்மை சிலிர்க்க, வார்த்தைகள் இன்றி 
சினமும் அழகென்று, உறைந்த சிலையென 
சிறு கணங்கள் கண்கள் விரிய 
என் மேல் கொண்ட அன்பு தான் காரணமோ!
என்று ஏக்கமும் வியப்பும் கலந்து தாக்க..
கருமையை கண்டு பளிச்சிடும் வெண்ணமையாய்..
தோழனவன் நடந்து வந்தான்..
கொஞ்சலாய் தலையாட்டி செல்வோம் வா!
எனக் கூறி மீண்டும் தொடங்கிது பயணம். 
சினம் அழகா? இவன் அழகா? என்று கேட்டபடியே 
எண்ணற்ற எண்ணங்களில் மிதந்துக் கொண்டே 
பயமில்லா என் மனதை நினைந்து பெருமைக் கொண்டேன் 
அவனை தடுக்காமல் நின்றதற்கு.. 
ஆணவமற்ற அவனின் சினம் கண்டு 
ஆர்பரிக்கும் கணங்கள் பெற்று  
வார்த்தைகள் வந்து மோத 
எழுதுகோல் இன்றி ஏங்கி நின்றேன். 
ஓடி வந்து தட்டச்சு செய்தேன் 
என் கணினி தோழி உன்னிடம் கூற! 
அவதூறாக பேசவில்லையே எனக் கேட்டான் 
இவன் தான் அழகென்று நெகிழ்ந்தது மனம்... 
ரசிகையாய் மாறிய தோழி, 
அன்புடன், 
சாரா  (Sarah)
பாடல் வரிகளில் திளைத்து மயக்கமாய்