Saturday, January 30, 2016

உணர்வுகளுடன் ஓர் உரையாடல்...

சினமும் அழகென்று இன்று கண்டேன் சகியே!

தோழன் ஒருவனுடன் சாலைப்  பயணம்.
இசையில் நனைந்த காதுகள்... 
சட்டென உயிர் பெற்ற நீர்நீங்கிய மீனைப் போல் 
சீரிய 'ஏய்' எனும் ஓசையில் விழித்தது ...
நிகழ்ந்தது என்னென்று உணராமல்..
என்னைத் தான் அழைத்தானோ?
ஏன் அப்படி ஒரு சீற்றம் அவன் குரலில்?
முன்னோக்கி பார்வை இட்டேன்.  
எருதினில் நிற்கும் எமணன நின்றதடி 
இரு சக்கர வாகனம் ஒன்று.
சீற்றத்தின் காரணம் அறிந்தும் தடுக்கும் மனமில்லை. 
பயமா? நியாயமடீ  என்ற மனக்குரலின் ஆளுமையா?
உணர்சிகள் உறைய சில கணங்கள். 
தன்னை விழுங்கும் சினத்தை விழுங்கிக்கொண்டு 
பொறுமை மறவாத பொறுப்புடன் 
தவறினை உணரா ஆணவம் கண்டு 
கொம்புகள் சீவிய காளை  போன்று, 
விருட்டென சென்றான்..வீரனாய் நின்றான். 
தட்டி கேட்கும் ஆண்மைக் கண்டேன் 
பெண்மை சிலிர்க்க, வார்த்தைகள் இன்றி 
சினமும் அழகென்று, உறைந்த சிலையென 
சிறு கணங்கள் கண்கள் விரிய 
என் மேல் கொண்ட அன்பு தான் காரணமோ!
என்று ஏக்கமும் வியப்பும் கலந்து தாக்க..
கருமையை கண்டு பளிச்சிடும் வெண்ணமையாய்..
தோழனவன் நடந்து வந்தான்..
கொஞ்சலாய் தலையாட்டி செல்வோம் வா!
எனக் கூறி மீண்டும் தொடங்கிது பயணம். 
சினம் அழகா? இவன் அழகா? என்று கேட்டபடியே 
எண்ணற்ற எண்ணங்களில் மிதந்துக் கொண்டே 
பயமில்லா என் மனதை நினைந்து பெருமைக் கொண்டேன் 
அவனை தடுக்காமல் நின்றதற்கு.. 
ஆணவமற்ற அவனின் சினம் கண்டு 
ஆர்பரிக்கும் கணங்கள் பெற்று  
வார்த்தைகள் வந்து மோத 
எழுதுகோல் இன்றி ஏங்கி நின்றேன். 
ஓடி வந்து தட்டச்சு செய்தேன் 
என் கணினி தோழி உன்னிடம் கூற! 
அவதூறாக பேசவில்லையே எனக் கேட்டான் 
இவன் தான் அழகென்று நெகிழ்ந்தது மனம்... 
ரசிகையாய் மாறிய தோழி, 
அன்புடன், 
சாரா  (Sarah)
பாடல் வரிகளில் திளைத்து மயக்கமாய் 

No comments:

Post a Comment