Tuesday, April 26, 2016

ஒரு சிறு தீவு-நான்!

இரு துருவங்களை 
கயிற் போட்டு கட்டினார்கள் 
தாலி கயிற் போட்டு கட்டினார்கள்..

இரண்டும் இரு பக்கமாய் ஓடி
அவ்வப்போது இணைந்து
அந்த ப்ரிக்ஷனில் முளைத்தது 
இரு தீவுகள்- எதிலும் சேரா
தாந்தோனிக் காடுகள்

ஏழாண்டு காலமாய் இழுத்த இழுப்பில் 
கயிறு அறுந்து போனது 
தீவுகள் இரு புறமாய் சிதறியது..
இன்றும் எதிலும் சேரா
தாந்தோனிக் காடுகளாய்

காலன் சிரித்தான் விசையீர்ப்பிருந்தால் 
துருவங்கள் அருகே வர 
தீவுகள் இணைந்து ஓர் நாடாகும் என்று.. 
ஞாலன் பழித்தான்...துருவங்கள் 
இறங்கி வருவதா? நொ! நெவர்! என்று..

பட்டுப் போகும் அபாயமும் 
காட்டுத் தீயாய் அழியும் ஆபத்தும் 
கேட்பாரற்ற தீவுகளை 
தீயாய் வாட்டியது.. 
இணையவும் இணைக்கவும் முயன்று 
முதலானவள் மூச்சற்று போனாள்
பேச்சற்று பிரிந்தாள்!
அரசன் ஒருவன் ஆட்கொண்டான்.. 
முதல் தீவு இன்று ஓர் தனி நாடானது!

பலரும் வந்து செல்லும் 
சுற்றுலா திடல் இரண்டாம் தீவு!
அரசன் வர காத்திருக்கும் 
ஓர் தன்னாட்சி காடு
எரிமலைகள் இங்குண்டு!
குளிர் திடல்களுமுண்டு!
பளிச்சிடும் முகம் கண்டு!
பலரும் வருவதுண்டு... 
குப்பைகளிட்டால் சுனாமியாய் 
துரத்திவிடும் ஆபத்துமுண்டு!

காலப்போக்கில் தனிமைக்கொண்டு 
சீற்றம் அடங்கிய கடலாய் 
குற்ற்ம் உணர்ந்த மனிதனாய்
முற்றும் அறிந்த முனிவனாய் 
நடு-நிலை பெற்று நிற்கிறது 
கைகள் நீட்டி இருபுறம் பற்றி 
சமமாய் நிற்க

காலப்போக்கில் வலிக்கும் கரங்கள்
விட்டுவிடத் தூண்டும்!
என எண்ணங்கள் பல அலை மோத,
மனமெனும் விசைப் பற்றி 
எத்திசையிலும் சாயாமல் 
கைகள் நீட்டி நடுவே நிற்கிறாள்
இரண்டாமானவள்

இதுதான் உறவோ?
உறவெனும் உணர்வோ?
தாமரை இலையில் நீரென 
ஒட்டுதல் இருந்து 
பற்றுதல்ற்ற தீவாய்!
சுடரிடும் தீயாய்

உணர்ச்சிக் கடலில்  
உயிரற்று மிதக்கும் மீனாய் 
அன்பு தோழி,
சாரா... 

Wednesday, April 13, 2016

இருமையில் ஒருமைத் தேடி.... The Enigma of Extremes!

Life is an Enigma.. 
A never-ending bunch of puzzles! 
It calls for Exploration, Introspection, Realizationa and Actualization. 
In this process we lose ourselves into the Wild!
We go in search of meaning!
We fear meaninglessness, failure, and discontent!
That leads to even more deeper thinking.. 
So here is what Sarah's Thoughts lead to...

THE ENIGMA OF EXTREMES

Like the M between the two E's of extreMes!
The M of me stands in the middle!
In between the two poles of living. 
The extremes of ambition and content calls.
For ambition lays at north high and flashy!
Content lays in South Peaceful and Serene!
When Sophistications mean North drags me
Its Stipulations repels me to the start!
When Serenity mean South pulls me!
Its Speculations pushes me to where I Stood!
Yet the attraction is endless!

Like the M between the two E's of extreMes!
The M of me stands in the middle!
In between the two poles of living. 
When Settling seems a blessing
Ambitions stand a question!
When ambitions mean the World 
So called Settling creates a Traffic Jam!
For the fear of Pain haunts me down!
The fear of Failure throbs me forever!

Where is the meaning?
Where is never Brooding?
Between the numerous roads that lead to The End
Which one do I Choose? 
For I want to take the road that takes me to...
The end that is most desired 
The end which never put you down 
Never gives you up before the Fury of Self-Introspection 

When there is no fixed Map
Walking is the only way
For the Oasis of life can be found 
Only when Searched For!
If falling is a part of the trail
Let me fall! But let the Fall not be Hard!
For Living an Enigma 
And I an Explorer 
Would wander searching a Way!
But never just Stay!


Love,
SARAH

இருமையில் ஒருமைத் தேடி.... 

இரு துருவங்களுக்கு இடையில் 
                 ஓர் உலகம் கொண்டு வாழ்கிறோம்!
சில நொடிகள் மேலே செல்லவும்  
                 சில நொடிகள் கீழே செல்லவும் ஆசைப் படுகிறோம்!
இரு புறமும் உள்ள விரைக்கும் பணியையும் 
                 மிருகங்களையும் கண்டு அஞ்சுகிறோம்!
எனினும் மாசற்ற அழகின் ஈற்ப்பை       
                 என்றும் நாடுகிறோம்! 
இது வேண்டும் ஆனால் 
                 வலி வேண்டா என ஓடுகிறோம்! 
வலி இருந்தாலும் உணர வேண்டாமென 
                  வழிகள் பலத் தேடுகிறோம்!
மனம் மட்டும் ஓடி.. மயில்கள் பலத் தாண்டி 
                  கனவு உலகம் சேருகிறோம்!
அய்யங்களுக்கும் ஆக்கத்திற்கும் இடையே 
                  வாழ்வெனும் ஆட்டம் ஆடுகிறோம்!
இரு வழியில் எது வழி என 
                 விழி விரித்து முழிக்கிறோம்!
எது காணல்? எது குளம்?
                  என குதித்து பார்த்து அறிகிறோம்! 

கேள்விகளின் பெட்டகமாய்,
ஆசைகளின் கூடாரமாய், 
இருமையில் ஒருமைத் தேடும்,
வெறுமைக் கண்டு அஞ்சும்,
அன்பு தோழி,
சாரா

Friday, April 8, 2016

என் டைரி பெட்டகத்திலிருந்து... 3. புலம்பல் குவியல் படிக்க வேண்டாம்!

3. புலம்பல் குவியல் படிக்க வேண்டாம்!
அ. கண்ணில் குறுதியின் பெருக்கம் 
      மனதில் சோகத்தின் தாக்கம் 
      வார்த்தைகள் உதடு மட்டும் ஓசையின்றி 
      என்ன இந்நிலையோ இப்பெண்ணுக்கு 
      துணைவன் பிரிவினால்!
      என்ன பரீட்சையோ வாழ்வில் 
      தனிமை நிலையினால்!
      எவருக்கும் இவ்வித நிலை வேண்டா..
      என்றும் ஓர் அடிமையாய்! 

ஆ. சுனாமியைப் போல் ஒரு 
      ஒரு அலை என்னைத் தாக்கினாலும் 
      மனதின் தாக்கம் குறையாது 
      வானளவு சோகம் பெருகினாலும்
      சோர்வின் தாக்கம் பெருகாது 
      மண்ணளவு எனும் நிம்மதி கிட்டும் என்றே 
      என் பொறுமையின் அளவு குறையாது 
      என்று வரை இந்நிலையோ நீ என்னை 
     ஆட்கொள்ள மாட்டாயோ வீடே 
     விடு பெறவே வீடு பெற நினைக்கிறேன்!

இ. கண்ணில் நீரில்லை 
      ஆனால் சோகத்தின் தாக்கம் 
      இதயம் துடிக்கிறது கதறலை நாடி 
      அங்ஙனம் தான் அறிந்தேன் 
      மனதின் அழுகை நீரில் இல்லை   
      ஏனோ !
      வற்றியது நீர்..
      மருகியது மனம்..
      பெருகியது துயர் 
      கருகியது திடம் 

கொடுமையாய் சோகக் கவிதை எழுதும் 
தோழி 
சாரா

என் டைரி பெட்டகத்திலிருந்து... 2. என் பதினாறு வயது காதல்!

2. என் பதினாறு வயது காதல்!

வானின் விண்மீன்கள் எண்ணி விடும் காலம் போதும் 
உன் மடியில் சாய்ந்துத் தூங்க!
விண்ணின் தூரம் அளந்துவிடும் நேரம் போதும் 
உன் தோழில் சாய்ந்து மகிழ!
மழைத் துளி தொட்டால் போதும் 
உன் அணைப்பை உணர!
என் விழி ஓரம் நீர் வழிவதே போதும் 
என் அன்பு என்னென்று நீ காண!
நிலவின் அழகு, நிலத்தின் அளவு 
கூட போதுமேன்றாகாது.. 
என் உணர்ச்சிகளைக் கொட்ட!
என் மனதில் எழும் தமிழின் பெருக்கம் 
வாய் மொழியில் எழாதோ உன் கண்கள் முன்?

வாய் பூட்ட பெற்ற 
பதினாறு வயது காதல் கிறுக்கி!
சாரா 

Wednesday, April 6, 2016

சாலையோரம்.. (A) The Scrooged Sleep - Reality?!

சாலையோரம்..
கவலைகளின்றி உறங்கும் கண்கள் கண்டேன்...
சோர்வில் சுருண்ட கால்கள் கண்டேன்...
கொசு வலை அந்தப்புரங்கள் கண்டேன்..
கொசுவின் ஸ்ருதியில்  குரட்டை சேர்ந்து.. 
இரவின் இசை வெளியீடு கண்டேன்..
யாரோ வாங்கிய புது வீட்டில் வாடகையின்றி...
வானம் பார்த்து ஒய்யாரமாய் உறங்கும் யோகம் கண்டேன்...
ஒன்பது மனிக்குள் ஒடுங்கும் உலகம் கண்டு.. 

காண்பது பொய்யோ என ஐயம் கொண்டு..
உழைப்பின் வரமான உறக்கம் இதுவோ?
நாளை மறந்த இன்று இதுவோ?
காவியில்லா சித்தர்களோ? 
வேள்வி பழகிய வீரர்களொ? 
கேள்விகள் இல்லா குபேர வாழ்வோ? 
இவையெல்லாம் என் கற்பனையோ?
கற்பனைக் கடந்த கர்ம வினையோ? 
எனக் கேள்விகள் சுமந்து நின்றேன்! 

நடை பழகி செல்லும் தோழி
சாரா


The Scrooged Sleep!

As I walk along the roadside, 
On a busy traffic evening, 
A sight of absolute contentment, 
Made me pause a moment of Thought!

Eyes shut from the baggage of worries, 
Legs snugged into the covering wraps, 
Like a snail in its shell,
Mosquito nets that became Master bedrooms, 

The music of snor meddled
with the hizzzez of the Night!
A Jackpot it is to spend the night 
On brand new home not spent for!

The absolute calmness amidst 
the roaring night life!
For is it my City or 
the long forseen Utopia?

A boon of tireless working?
Living the reality of the day
Leaving the fantasy of tomorrow
Monks of Modern World!

Fighters are they, for they mastered the art of survival!
Neither questioned nor bothered!
The midas touch life
For Gold it is indeed!
To sleep peacefully under any sky, 

Inquisitive becomes my heart, 
For is it the mirage of my eyes?
or the Oasis of ultimate truth?
When work becomes a Scrooge,
That grants the sleep!
Tough becomes the day
For the fight becomes endless!

In deep thoughts, 
On the consuming fury of Work-life, 
Walking a snail-pace, 
Love
Sarah