Thursday, May 19, 2016

காதல் மேல் காதல் எனக்கு!

காதல்... காமமும் அன்பும் கலக்கும் சங்கமம்
காமம் உடலும் அன்பு உயிருமாய் மோகிக்கும் நிலைக்- காதல்!
உடல் என்பது தசையல்ல- தசைத் தாண்டிய ஓர் விசை
தசை மாண்டும் விசை மாறா ஓர் பிழைக் காதல்!

பிழை! 
ஏனோ பிழைகளெல்லாம் மறைந்துப் போவதால்...
அதுவே மறை!
மறந்து மன்னித்து வாழ்வது- காதல்!

மன்னிபதிலும் சுகம் மன்னிப்பு கேட்பதிலும் சுகம்..
ஏன் கேட்க வேண்டும் எனும் திமிர் தருவதும் காதல்!
திமிரெல்லாம் துலைத்து அவன் முன் வெட்கத்தில் குழைவது
வெட்கமெனும் ஆபரணம் சூட்டிவிடும் சுட்டித்தனம் காதல்!

இன்று, பிடிக்கும் என அவன் கூற ஏங்குவதும் 
மழை நாளில் மனம் பறப்பதும் காதல்!
தீண்டும் அவன் கண்களும், சீண்டும் அவன் கைகளும் 
அவன் மனக் காட்டில் எனைத் தொலைப்பது காதல்!

மணிக் கட்டு பார்த்து சந்தித்தாலும் 
மனம் நிறைக்கச் செய்யும் இனிப்பு, காதல்!
தொலைபேசி இடையூறுகள் பொறுப்பதும் 
தொலைவில் அவன் போனால் வெறுப்பதும் காதல்!

மனதைக் கண்ணாடியாய்க் காட்டும் தைரியம்
எண்ணங்கள் எதுவானாலும் ஏற்க்கும் மோகம்- காதல்!
நடு இரவில் குறுஞ்செய்தி படித்து
எனை மறந்து தூக்கத்தில் புன்னகை- காதல்!

எனை போல் அவனில்லை என அறிவது- அறிந்தும் 
செல்லச் சண்டைகளுக்கு ஆசைக் கொள்வது காதல்!
சண்டைகள் இறுதியில் கோபமா எனக் கேட்பதும் 
எனக்கென்ன கோபம் எனும் அழகியப் பொய்-காதல்!

நான் எப்படியானாலும் அவன் ரசிப்பான்- அறிந்தும்
அவனுக்காகவே அலங்கரித்துக் கொள்வது காதல்!
வேலை முடிக்கும் வேளைக்குக் காத்திருந்து, 
வியர்வைக் காணா அணைப்புகள்- காதல்!

பிடிக்காத வீட்டு வேலைகளும்- அவனை அக்கரையோடு 
பார்த்துக் கொள்வதில் பிடித்துப் போவது- காதல்!
பிடித்துப் போகும் 1000 ஆண்கள் வந்தாலும்
அவனுக்கென கண்ணியம் காப்பது காதல்!

சாலையில் கைக் கோர்க்கவில்லை என்றாலும் 
அவன் கண்கள் எனை நீங்காமல் இருப்பது- காதல்!
ஊரெல்லாம் அறிய காட்டிக் கொள்ளாமல்
எங்கள் அரை ரகசியங்கள் காப்பது- காதல்!

அவன் வட்டத்தில் நானும் என் வட்டத்தில் அவனும் 
இணையும் வென்ன் டையக்ராம்- காதல்!
இப்படி எல்லாம் எண்ணங்கள் தந்து மகிழ்விப்பதனாலோ
ஏனோ, காதலே எனக்கு உன் மேல் கொள்ளைக் காதல்!

காதல் கிறுக்கில்
கிறுக்கிக் கொண்டிருக்கும் 
அன்பு தோழி,
சாரா

4 comments:

  1. பிடித்துப் போகும் 1000 ஆண்கள் வந்தாலும்
    அவனுக்கென கண்ணியம் காப்பது காதல்!

    Rare lines...!

    ReplyDelete
  2. Typical village girl outlook which would beat even a bloody city-bred guy !

    Nicely penned !!

    ReplyDelete