Tuesday, April 26, 2016

ஒரு சிறு தீவு-நான்!

இரு துருவங்களை 
கயிற் போட்டு கட்டினார்கள் 
தாலி கயிற் போட்டு கட்டினார்கள்..

இரண்டும் இரு பக்கமாய் ஓடி
அவ்வப்போது இணைந்து
அந்த ப்ரிக்ஷனில் முளைத்தது 
இரு தீவுகள்- எதிலும் சேரா
தாந்தோனிக் காடுகள்

ஏழாண்டு காலமாய் இழுத்த இழுப்பில் 
கயிறு அறுந்து போனது 
தீவுகள் இரு புறமாய் சிதறியது..
இன்றும் எதிலும் சேரா
தாந்தோனிக் காடுகளாய்

காலன் சிரித்தான் விசையீர்ப்பிருந்தால் 
துருவங்கள் அருகே வர 
தீவுகள் இணைந்து ஓர் நாடாகும் என்று.. 
ஞாலன் பழித்தான்...துருவங்கள் 
இறங்கி வருவதா? நொ! நெவர்! என்று..

பட்டுப் போகும் அபாயமும் 
காட்டுத் தீயாய் அழியும் ஆபத்தும் 
கேட்பாரற்ற தீவுகளை 
தீயாய் வாட்டியது.. 
இணையவும் இணைக்கவும் முயன்று 
முதலானவள் மூச்சற்று போனாள்
பேச்சற்று பிரிந்தாள்!
அரசன் ஒருவன் ஆட்கொண்டான்.. 
முதல் தீவு இன்று ஓர் தனி நாடானது!

பலரும் வந்து செல்லும் 
சுற்றுலா திடல் இரண்டாம் தீவு!
அரசன் வர காத்திருக்கும் 
ஓர் தன்னாட்சி காடு
எரிமலைகள் இங்குண்டு!
குளிர் திடல்களுமுண்டு!
பளிச்சிடும் முகம் கண்டு!
பலரும் வருவதுண்டு... 
குப்பைகளிட்டால் சுனாமியாய் 
துரத்திவிடும் ஆபத்துமுண்டு!

காலப்போக்கில் தனிமைக்கொண்டு 
சீற்றம் அடங்கிய கடலாய் 
குற்ற்ம் உணர்ந்த மனிதனாய்
முற்றும் அறிந்த முனிவனாய் 
நடு-நிலை பெற்று நிற்கிறது 
கைகள் நீட்டி இருபுறம் பற்றி 
சமமாய் நிற்க

காலப்போக்கில் வலிக்கும் கரங்கள்
விட்டுவிடத் தூண்டும்!
என எண்ணங்கள் பல அலை மோத,
மனமெனும் விசைப் பற்றி 
எத்திசையிலும் சாயாமல் 
கைகள் நீட்டி நடுவே நிற்கிறாள்
இரண்டாமானவள்

இதுதான் உறவோ?
உறவெனும் உணர்வோ?
தாமரை இலையில் நீரென 
ஒட்டுதல் இருந்து 
பற்றுதல்ற்ற தீவாய்!
சுடரிடும் தீயாய்

உணர்ச்சிக் கடலில்  
உயிரற்று மிதக்கும் மீனாய் 
அன்பு தோழி,
சாரா... 

2 comments: